இது யூனிக்கோடு தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம். யாழ் சுரதா அவர்களின் நிரலினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நிறையப் பங்களிக்கும் திரு. சுரதா அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து அறிந்து கொள்ளவும்.
உயிர் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் இதர எழுத்துக்கள்
a
A or aa
i
I or ii
u
U or uu
e
E or ee
ai
o
O or oo
au
க் k
ச் s or ch
ட் t or d
த் th
ப் p or b
ற் R
ங் ng
ஞ் nj
ண் N
ந் w or n-
ம் m
ன் n
ய் y
ர் r
ல் l
வ் v
ழ் z
ள் L
q
ஹ் h
ஷ் sh
ஸ் S
ஜ் j
ஸ்ரீ Srii (or) SrI
இந்தப் பெட்டியில் ஆங்கிலத்தில் அடித்தால் அதற்கு ஒத்த தமிழ் டிரான்ஸ்லிடரேசன் மேலே உள்ள பெட்டியில் வந்துவிடும்.
 
அகரம் இணையத்தளத்தில் நீங்கள் தமிழில் சேர்க்க விரும்பும் தகவல்கள், கருத்துக்களை இந்த பக்கத்தின் உதவி கொண்டு மிக எளிதாக டைப் செய்து கொள்ளலாம். தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே டைப் செய்து, அதனை வெட்டி அல்லது பிரதி (cut or copy) எடுத்து, தங்களுக்கு தேவையான இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
இங்கே சற்று விளக்கமாக பயன்படுத்தும் முறையை தெரிவிக்க விரும்புகின்றோம். சில நிமிடங்கள் செலவு செய்தால் போதுமானது. நீங்கள் மிக எளிதாய் கற்றுக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:
இதனைப் பயன்படுத்தும் முன்பு தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு ரகசியம், மெய்யெழுத்தும், உயிர் எழுத்தும் சேர்ந்துதான் உயிர் மெய் எழுத்து உருவாகின்றது என்பது. இது ஊருக்கே தெரிந்த ரகசியம் என்கின்றீர்களா. அவ்வளவுதான்.. இது தெரிந்தால் போதுமானது. அதன் பிறகு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, எந்த தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்து(கள்) பொருந்தும் என்பது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களுக்குமே தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 மற்றும் ஆயுத எழுத்துக்கு மட்டும் தெரிந்தால் போதும். கூடவே நான்கு வட மொழி எழுத்துக்களுக்கும் தெரிந்து கொள்ளுங்கள். நிறையப் பயன்படும். மேலே உள்ள அட்டவணையைப் பார்த்து இணையான ஆங்கில எழுத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
 
இப்போது எப்படி டைப் செய்வது என்றுப் பார்க்கலாம். மேலே இரண்டு பெட்டிகள் உள்ளன. கீழே இரண்டாவதாக உள்ள பெட்டியில்தான் நாம் ஆங்கிலத்தில், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். நாம் டைப் செய்யும் ஆங்கில வார்த்தைகளுக்கு ஒத்த தமிழ் டிரான்ஸ்லிட்டரேஷன் மேலே உள்ள பெட்டியில் தோன்றும்.
 
கீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும். அதனால்தான் தமிங்கிலம் என்று குறிப்பிட்டு உள்ளோம்.
 
சரி, இதனைப் பயன்படுத்தி 'அம்மா' என்பதை எப்படி டைப் செய்வது?. மிகவும் எளிது. 'அ' விற்கான ஆங்கில எழுத்து a. 'ம்' க்கு m. அடுத்த எழுத்தில்தான் விசயம் உள்ளது. 'மா' விற்கான ஆங்கில எழுத்து மேலே அட்டவணையில் இல்லை. எப்படி டைப் செய்வது? உயிர்மெய் எழுத்தின் சூத்திரத்தை நினைவு கொள்ளுங்கள். ம் + ஆ என்பதே மா. இது தெரிந்தால் எளிது. இப்போது ம் க்கு மீண்டும் ஒருமுறை m டைப் செய்யவும். ஆ விற்கு A அல்லது இருமுறை aa என்று டைப் செய்யவும். உங்களுக்கு அம்மா கிடைத்துவிடும். அதாவது கீழே உள்ள பெட்டியில் ammA அல்லது ammaa என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' வருவார்.
 
மூன்று எழுத்தினை டைப் செய்ய இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா என்று சோர்ந்து விடாதீர்கள். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கம் சற்று அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இது மிகவும் எளிதான விசயம். சற்று பொறுமையுடன் இரண்டு பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டீர் என்றால் போதுமானது. அதன் பிறகு மிக வேகமாய் டைப் செய்ய இயலும்.
 
ஒரு சில வார்த்தைகளை பலவிதமாக டைப் செய்யலாம். உதாரணமாக, அம்மாவிற்கு அடுத்த ஆட்டினை எடுத்துக் கொள்வோம். ஆடு என்பதை எப்படியெல்லாம் டைப் செய்யலாம் என்று பாருங்கள். ஆடு - Adu அல்லது aadu அல்லது Atu அல்லது aatu. உங்களுக்கு எது எளிதோ அதன்படி டைப் செய்து கொள்ளுங்கள்.
 
அடுத்த முக்கியமான விசயம். தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் ஆங்கில வார்த்தைகள் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் தமிழில் டைப் செய்ய வேண்டிய அனைத்தையும் டைப் செய்து முடித்து விட்டு, அதன் பிறகு மேலே உள்ள பெட்டிக்கு வந்து தேவையான இடங்களில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்கவும். மேலே ஆங்கில வார்த்தைகள் சேர்த்த பின்பு, கீழே உள்ளப் பெட்டியில் ஏதேனும் டைப் செய்தீர்கள் என்றால், மேலே சேர்த்த ஆங்கில வார்த்தைகள் மறைந்துவிடும். கவனத்தில் கொள்ளவும்.

இதற்கு உதாரணம். "இது மிகவும் interesting ஆக இருக்கு." என்பதை டைப் செய்ய வேண்டும் என்றால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் "இது மிகவும் ஆக இருக்கு" என்பதை மட்டும் தமிங்கிலத்தில் டைப் செய்யவும். அதாவது, ithu mikavum aaka irukku. இப்போது மேலே உள்ளப் பெட்டியில் 'இது மிகவும் ஆக இருக்கு' என்பது தோன்றியிருக்கும். பிறகு மேலே வந்து "மிகவும்" க்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் interesting என்பதை டைப் செய்யவும்.
 
நாம் சாதாரணமாக தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எப்படி எழுதுவோமோ அப்படியே டைப் செய்யவும். பெரும்பான்மையான எழுத்துக்கள் ஒத்து வரும். ஒரு சில எழுத்துக்கள் மாறுபடும். குறிப்பாய் சொல்ல வேண்டும் என்றால், 'ந்'. மூன்று இன் (ந், ண், ன்) இருப்பதால் இந்தப் பிரச்சனை. ன் ற்கு n ம், ண் ற்கு N ம் ஒதுக்கப்பட்டு விட்டதால், 'ந்' ற்கு சற்று வித்தியாசமாக w ஒதுக்கப்பட்டுள்ளது. n- என்பதையும் பயன்படுத்தலாம். பழக்கத்தில் மிக எளிதாய் வந்துவிடும்.
 
இறுதியாக மீண்டும் ஒருமுறை வற்புறுத்துகின்றோம். சற்றுப் பொறுமையுடன் இரண்டு மூன்று பக்கங்கள் டைப் செய்து பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
 
 
Drop here!